நாடெங்கிலும் புனித ஹஜ் பெருநாள் தொழுகை

Report Print Ashik in சமூகம்

நாடெங்கிலும் உள்ள முஸ்ஸிம் மக்கள் இன்றைய தினம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் புனித ஹஜ் பெருநாளை அமைதியான முறையில் கொண்டாடுவதாக தெரியவந்துள்ளது.

மன்னார், மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் காலை 8 மணியளவில் மௌலவி எஸ்.ஏ.அஸீம் தலைமையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ஆண்,பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹட்டன்

ஹட்டன் நகரில் உள்ள பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் முஸ்லிம் மக்கள் விசேட ஹஜ் பெருநாள் தொழுகையிலும் பிராத்தனைகளிலும் ஈடுப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, ஹஜ் பெருநாள் பண்டிகையை முஸ்லிம் மக்கள் மிக சந்தோஷமாக கொண்டாடியதை காணக்கூடியதாக இருந்தது.

செய்தி - திருமாள்

திருகோணமலை

திருகோணமலை - கந்தளாய் ஜும்மா பள்ளிவாசலில் ஹஜ் பெருநாள் தொழுகைகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

ஆண்கள், பெண்கள் எனப் இருபாலாருக்கும் தொழுகைகள் இடம்பெற்றிருந்தன.

செய்தி - முபாரக்

கல்குடா

கல்குடா கிளையின் ஏற்பாட்டில் திறந்த வெளியிலான ஹஜ் பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் நடைபெற்றுள்ளது.

பெருநாள் தொழுகையும் கொத்பா பேருரையும் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா கல்குடா கிளையின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மதினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கல்குடாத்தொகுதி முஸ்லிம் பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.

செய்தி - நவோஜ்

Latest Offers