ஹட்டன் - புனித அன்னம்மாள் ஆலய திருவிழா: கொட்டும் மழையில் பக்தர்கள் ஊர்வலம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன், புனித அன்னம்மாள் திருச்சிலுவை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் திருச்சுரூப பவனியும் கொட்டும் மழையிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மத்திய மாகாண அதி வணக்கத்திற்குரிய ஆண்டகை வியாணி பெர்னாண்டோ தலைமையில் நேற்று மாலை திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆலய பங்கு தந்தை நிவ்மன் பீரிஸின் ஏற்பாட்டில் திருச்சுரூப பவனி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

திருவிழாவினை முன்னிட்டு ஹட்டன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியிருந்தனர்.

கொட்டும் மழையினையும் பாராது சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் நவ நாள் திருப்பலிகள் இடம்பெற்று வந்தன.

Latest Offers