விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை விடுவிக்கக் கோரி ஹட்டனில் போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை விடுவிக்க கோரி ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஹட்டன் நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

வல்லரசு நாடுகள் நான்காம் யுத்தத்திற்கு ஆயத்தமாகி வருவதாகவும், இன்று வல்லரசு நாடுகள் அவருக்கு எதிராக பல்வேறு குற்றங்களை சுமத்தி அவரை சிறையில் அடைத்து நாடு கடத்த உள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுவதாகவும் போரட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

அவர் நாடு கடத்தப்பட உள்ளமையை தடுக்க வேண்டும் என்றால் உலகலாவிய ரீதியில் பரந்து வாழும் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும்.

சர்வதேச வல்லரசு நாடுகள் மேற்கொள்ளும் அட்டுலியங்களுக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டால் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதனையும் பேச்சு சுதந்திரத்தனையும் எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் எனவே இவ்வாறான செயல்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என போரட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டகாரர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷமிட்டவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்திருந்தனர்.

போராட்டத்தினை தொடர்ந்து விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று ஹட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

Latest Offers