இலங்கையில் குட்டி லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவை நோக்கி பெருந்திரளான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
தற்போது பாடசாலை விடுமுறைக்காலம் என்பதால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுள்ள கண்கவர் இடங்களுக்கு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்.
இந்த நிலையில் நுவரெலியாவின் எல்ல இராவணா நீர்வீழ்ச்சி, ஹக்கல பூங்கா, சீதா எலிய அம்மன் ஆலயம், அம்பேவல பால்பண்ணை போன்ற இடங்களை நோக்கியே பலர் விரைகின்றனர்.
நுவரெலியாவில் குளிரான காலநிலை நிலவுகின்ற போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.