அறுபது நூறாக மாறியது! அதேவேளை இருபது இறுபதாகியது ஏன்?

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

இலங்கையின் குட்டி லண்டன் என அழைக்கப்படும் நுவரெலியாவில் அமைந்துள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவிற்குச் செல்லும் உல்லாசப் பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.

பூங்காவிற்கு வருகை தரும் பயணிகள் சோதனை நடவடிக்கையின் பின்னரே உள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

பூங்காவின் நுழைவுக்கட்டணம் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான அறிவித்தல் பலகையும் மும்மொழியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் 60 ரூபாய் என முதல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுவர்களுக்கான நுழைவுக்கட்டணம் இருபது என்பதற்கு பதிலாக இறுபது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமும் பல்லாயிரக்கணக்கான மூவின மக்களும் பார்வையிடும் அரச நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் இவ்வாறு எழுத்துப்பிழை இருப்பதை உரிய அதிகரிகளின் கவனத்திற் கொள்ள வேண்டும்.

Latest Offers