கொழும்பில் இளைஞர்களின் தாக்குதலுக்கு இலக்காகிய சிகையலங்கார நிலைய முகாமையாளர் பலி

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பு - கொம்பனி வீதியில் நேற்றிரவு சிகையலங்கார நிலையம் ஒன்றின் முகாமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முகாமையாளரும், அவருடைய நண்பியும் சிகையலங்கார நிலையத்திற்கு அருகில் வந்த போது சில இளைஞர்கள் குறித்த நண்பியை தொந்தரவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்ட முறுகலின்போதே இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளான முகாமையாளர் மரணம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் கொம்பனி வீதியின் பிரதேசத்தின் முத்தையா வீதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை நடத்தியதாக கூறப்படும் ஐந்து இளைஞர்கள் விமானப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest Offers