ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரதேசசபை உறுப்பினர் கைது

Report Print Aasim in சமூகம்

புத்தளம் மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்து சென்று கொண்டிருந்த வேளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers