கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் வீட்டின் பின்புறம் இருந்த கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் வீட்டின் சமையலறையில் இரு பெண்கள் சமைத்துக்கொண்டிருந்த சமயம் வீட்டின் பின்புறம் இருந்த பாரிய கற்பாறை சரிவுக்குள்ளாகி வீட்டில் விழுந்ததால் வீட்டில் சமையலறையில் இருந்த இரு பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 40 வயது மற்றும் 17 வயதுடைய இரு பெண்களுமே இவ்விபத்தில் சிக்குண்டுள்ளனர்.

தோட்ட பொதுமக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டோர் இருவரும் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers