ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு!

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின், தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணம் இருப்பதனால் குறித்த வீதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுபடுத்தப்பட்டுள்ளது.

கினிகத்தேனை, தியகல பகுதியில் உள்ள மண்மேடு பகுதியே இவ்வாறு சரிந்த வண்ணம் காணப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று மாலை பல மணி நேரம் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில், சிறிது நேரம் கனரக வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

ஹட்டனிலிருந்து செல்லும் வாகனங்களை நாவலப்பிட்டி, தலவாக்கலை மற்றும் கலுகல, லக்சபான வழியையும் பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest Offers