தமிழர் கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் வவுனியாவில் சிறுவர் கலாசார விழா

Report Print Thileepan Thileepan in சமூகம்

தமிழர், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களை வெளிப்படுத்தும் வகையில் கலாசார விழா ஒன்று வவுனியா எல்லப்பர் மருதங்குளம் அபிவிருத்தி சங்க வளாகத்தில் இடம்பெற்றது.

சிறுவர் அபிவிருத்தி கரங்கள் நிறுவனத்தின் நிர்வாகியும் வவுனியா நகரசபை உறுப்பினருமாகிய க.செந்தில்ரூபன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் தமிழர் பாரம்பரியத்துடன் தொடர்புடைய பனையோலை மாலைகள், பனையோலை அட்டைகள் அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், தமிழர் பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாற்றப்பட்டது. அத்துடன் சிறந்த கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் தமிழர் பாரம்பரிய, கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர்களான ந.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், சு.காண்டீபன், மற்றும் கிராம அலுவலர், அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட பிரதிநிதிகள், சிறுவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers