ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை..? சீமான் விசனம்

Report Print Jeslin Jeslin in சமூகம்

இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழர்கள் கோரிக்கையினை மத்திய அரசு நிறைவேற்றப்போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகம், நெல்லையில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பங்களாதேஷ் மற்றும் திபெத்தில் இருந்துவந்த அகதிகளுக்கு கொடுத்த முன்னுரிமையினை தமிழர்களுக்கு தரவில்லை.

குறிப்பாக திபெத்தியர்களுக்குக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

ஆனால் இங்கிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை.

இவ்வாறு இருக்கையில் அவர்களது கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் நிறைவேற்றுமா என்பது சந்தேகமே. இருப்பினும் இந்த நல்லவிடயங்களை விடுத்து தமிழகத்தை பாதிக்கும் வகையில் பல திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers