மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை! திருகோணமலையில் சம்பவம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரங்குடா பகுதியில், நேற்றிரவு இருவருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் மூவர் ஒன்றிணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மதுரங்குழிய-கோடுவாடுவ பகுதியைச் சேர்ந்த வெல்லவகே சுமித் பிரணாந்து(40 வயது) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest Offers