கொட்டகலையில் பெய்த கனமழையால் பாதிப்படைந்துள்ள மக்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன் - கொட்டகலை பகுதிகளில் நேற்று காலை பெய்த கன மழை காரணமாக பல வீடுகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொட்டகலை கிறிஸ்னஸ்பாம் தோட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளன.

இதேவேளை, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தியகல பகுதியில் மரம் முறிந்து விழும் அபாயமும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அப்பகுதியயில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers