இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து! இளைஞரொருவர் மரணம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலையில், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

தோப்பூர் ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த நாஸிக்கீன் முஹமட் றிஸ்லான்(வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக காணப்பட்ட வேலிப் பாதுகாப்பு கம்பம் ஒன்றில் மோதியதிலே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.