இந்திய மீனவர்கள் நால்வர் கடற்படையினரால் கைது..

Report Print Sumi in சமூகம்

இலங்கை கடற்பரப்பினை அண்மித்த நெடுந்தீவு கடற்பரப்பினுள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

கைதான மீனவர்கள் இராமேஸ்வரம் பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும், நேற்று இரவு ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த போது இவர்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதான மீனவர்கள் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Latest Offers