கடமைகளை பொறுப்பேற்றார் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் புதிய தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்றுள்ள என்.பி.வெலிகள தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வவுனியாவின் 22ஆவது தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ள இவர் இன்று முற்பகல் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

என்.பி.வெலிகள களுத்துறை மாவட்டம் ஹொறண பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தனது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வவுனியாவிற்கு வருகை தந்துள்ள அவர் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

Latest Offers