இலங்கையில் பசியின் கொடுமையால் மரணத்தை தேட முயன்ற குடும்பம்!! இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐரோப்பிய பிரஜை

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் பசியின் கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற குடும்பம் ஒன்றுக்கு ஐரோப்பாவில் வாழும் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்ட தாய் மற்றும் மகளுக்கு ஜேர்மன் வாழ் இலங்கையர் ஒருவர் வீடு கட்டிக்கொடுப்பதற்கு உதவி செய்துள்ளார்.

அண்மையில் கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள் பசி கொடுமையால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். எனினும் அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு அவர்களை காப்பாற்றியிருந்தனர்.

இதுதொடர்பான செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளியாகி இருந்த நிலையில், ஜேர்மனில் வாழும் லால் குணவர்தன என்ற இலங்கையர் இந்த உதவியை செய்துள்ளார்.

தாம் வெளிநாட்டில் வாழ்ந்தாலும், ஊடகங்கள் வாயிலாக இலங்கை குறித்து ஆராய்வோம். நாட்டில் வறுமையிலுள்ளவர்களுக்கு வெளிநாட்டிலுள்ளவர்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.