கடற்படையினரின் படகு மோதி மீனவர் படகு நாசம்

Report Print Mohan Mohan in சமூகம்

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் கடற்படையினரின் ரோந்து படகு ஒன்று மீனவர் படகுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இலங்கை கடற்படையினரின் படகு ஒன்று வடமராட்சி கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நேற்று இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மீனவர்படகு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர் பளை பொலிஸ் நிலையத்திற்கு இன்று சென்று முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதி கடற் கரையிலிருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் மற்றும் பளை பொலிஸாரும் விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.