வவுனியா - செட்டிகுளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் பலி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிக்குளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் குறித்த சிறுவன் சல்வார் தாவணி வைத்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

இதன்போது, தாவணி ஜன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிக்கையில், தாவணி கழுத்தில் இறுகியுள்ளது.

உயிரிழந்த சிறுவன் 8 வயதுடைய சசிதரன் கிருசான் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் தந்தையார் கொலைச் குற்றச்சாட்டு ஒன்றின் தொடர்பில் 2015ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை கைதியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ளார்.

இந்நிலையில் சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொலை செய்வார்களா என கழுத்தில் இறுக்கி பல தடவை வினவியதுடன், தந்தையார் தொடர்பில் மன அழுத்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.