சாரதிகளுக்கு கவலையான தகவல்! நேற்று நள்ளிரவு முதல் ஏற்பட்ட மாற்றம்

Report Print Vethu Vethu in சமூகம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை திருத்தம் செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 2 ரூபாயில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 138.00 ரூபாயாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 4 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 163.00 ரூபாயாகும்.

இதற்கு மேலதிகமாக சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 134 ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டோ டீசல் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.