சிறீதரனுக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்ட பொதுமக்கள்!

Report Print Arivakam in சமூகம்

தமது பல தேவைகளை நிறைவேற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற சிவஞானம் சிறீதரனுக்கு தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள் கிளிநொச்சி கல்லாறு கிராமமக்கள்.

கல்லாறு கிராம மக்களுடனான சந்திப்பு கல்லாறு பொது நோக்கு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. அதன்போதே கலந்து கொண்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

அண்மையில் கல்லாறு கிராமத்திற்கு வருகை தந்தபோது கிராமமக்களால் விடுக்கப்பட்ட பிரதான கோரிக்கையாக இருந்த கல்லாறு பிரதான வீதியை கிரவல் மூலமாகவேனும் முதற்கட்டமாக புனரமத்து தருமாறு

விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தற்போது 40 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படுகிறது.

கல்லாறு கிராமததின் விளையாட்டுக் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரால் 10 இலட்சம் ரூபாய் மைதான புனரமைப்பிற்காகவும் மைதானத்திற்கு மின்னொளி பொருத்துவதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் புனரைமப்பு செய்யப்படும் வீதி மைதானம் சந்தை போன்றவற்றை பாராளுமன்உறுப்பினர் பார்வையிட்டார்.

குறித்த நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர்களான கலைவாணி ஜீவராசா தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் விஜயன் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.