தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க புதிய முயற்சி!

Report Print Vethu Vethu in சமூகம்

தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியையும் சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியையும் கற்பதை இலகுவாக்கக்கூடிய புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் கீழ் தமிழ் படைப்புக்கள் சிங்கள மொழியிலும் சிங்களப் படைப்புக்களை தமிழ் மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக வலுவூட்டல் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற பேராசிரியர் சுனில் ஆரியரத்ன சிங்களத்தில் மொழி பெயர்த்த இராமாயணத்தையும், தமிழ் நாட்டுப்புற படைப்புக்களையும் சிங்கள மக்கள் மாணவர்கள் மத்தியில் வழங்க முடிந்துள்ளது. இலக்கியத்தில் தடம்பதித்த மார்ட்டின் விக்கிரமசிங்கவின் மடோல்தூவ, கம்பெரலிய முதலான படைப்புக்களையும் தமிழ் மாணவர்கள் சொந்த மொழியில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இதன்மூலம் சிங்கள – தமிழ் மொழிகளை கற்கும் வாய்ப்பும் இருசமூகங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு உருவாகியிருக்கின்றது. இதற்கு தெரிந்தால் கற்றுக்கொடுங்கள் - தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மொழி மாற்ற படைப்புக்கள் பற்றி சரியாக பதிலளிக்கக்கூடிய மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.