ரயில் பயணங்களில் ஈடுபடும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

Report Print Vethu Vethu in சமூகம்

2019ம் ஆண்டின் இறுதிக்குள் E-ticket எனப்படும் இலத்திரனியல் ரிக்கட் வசதியை அறிமுகம் செய்யப்போவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

QR code system, Smart cards போன்றவற்றையும், இயந்திரங்களையும் பயன்படுத்தி இலத்திரனியல் அனுமதிப்பத்திரச் சேவைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக திரு.பெர்னான்டோ குறிப்பிட்டார்.

புதிய சேவைகள் பழக்கப்படும் வரையில் பயணிகளுக்கான டிக்கட் வழங்கும் பழைய முறையானது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மருதானைக்கும், கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் பாதைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அத்துடன் பொல்கஹவெல, குருநாகல் ரெயில் பாதையில் இலத்திரனியல் சமிக்ஞைத் தொகுதியைப் பொருத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரெயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.