பாதுகாப்பு அமைச்சில் குழப்பம்! இராணுவ சிப்பாய் தன்னை தானே சுட்டு தற்கொலை

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இன்று அதிகாலை 4.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டவர், அத்தனகடவல, பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இராணுவ சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இராணுவத்தின் பொறியியல் பிரிவில் சேவை செய்பவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers