பொது பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ள அரசாங்க வைத்தியர் சம்மேளனம்

Report Print Ajith Ajith in சமூகம்

மருத்துவக் கல்வியின் தரத்தை பேணுமாறு கோரி அரசாங்க வைத்தியர் சம்மேளனம் பொது பணிப் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பான திகதி நாளை தீர்மானிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியின் தரம் சட்டமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

தகுதியற்றவர்கள் மருத்துவர்களாக நியமிக்கப்படக் கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே செய்தியாளர்களிடம் இது தொடர்பில் விளக்கமளிக்கும் போது,

மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த கல்வியை சட்டமுறைக்கு கொண்டு வரும் முயற்சிக்கு அமைச்சர் ராஜித சேனாரத்னவே தடையாக இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Latest Offers