நாவலப்பிட்டி - கெட்டபுலா தோட்டத்தில் மண்சரிவு அபாயம்: பல குடும்பங்கள் வெளியேற்றம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நாவலப்பிட்டி, கெட்டபுலா தோட்டம் - கொங்காலை பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 18 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கெட்டபுலா தோட்டம் - கொங்காலை பிரிவில் 8ஆம் இலக்க லயன் தொடர் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் வசித்து வந்த 75 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் மற்றும் ஏனைய வசதிகளை தோட்ட அதிகாரியாலும், பிரதேச செயலகத்தினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Latest Offers