மண்சரிவு அனர்த்தம் காரணமாக குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள பல குடும்பங்கள்

Report Print Thirumal Thirumal in சமூகம்

லிந்துலை - தலவாக்கலை லோகி தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 19 வீடுகளை கொண்ட லயன் குடியிருப்பு பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த லயன் குடியிருப்பில் 8 சமையலறைகள் மீது மண்மேடு சரிந்து சுவரோடு இருக்கும் அதேநேரத்தில் ஒரு சமையலறை முற்றாக மண்ணினுள் புதையுண்ட நிலையில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக 19 குடும்பங்களை சேர்ந்த சுமார் 89 பேர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு குறித்த தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும், பாடசாலையிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இவர்களுக்கு சமைத்த உணவுகளையும், ஏனைய வசதிகளையும் தோட்ட நிர்வாகமும், கிராம உத்தியோகத்தரின் ஊடாக கொட்டகலை பிரதேச சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.