பல பெண்களுக்கு காதல் வலை விரித்த இராணுவ வீரர்..? தற்கொலைக்கான காரணம் வெளியானது

Report Print Jeslin Jeslin in சமூகம்

பாதுகாப்பு அமைச்சில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டமைக்கு காதல் விவகாரமே காரணம் என தெரியவந்துள்ளது.

இன்று காலை குறித்த இராணுவ அதிகாரி துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பொலன்னறுவை - அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இராணுவ அதிகாரியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த இராணுவ வீரர் பல காதல் உறவுகளை பேணி வந்துள்ளமையும் தற்போது தெரியவந்துள்ளது.

இதில் ஒரு காதலி, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவருக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில், "எனது காதலின் அளவை நாளை காண முடியும்" என குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.