காலம் காலமாக தமிழர்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளை தீர்ப்பவரே எம்மைப் பொறுத்தவரை நல்லவர் என யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன நிலையில் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை களமிறக்கியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரையில் ரணில் விக்ரமசிங்கவா, சஜித் பிரேமதாசவா, கரு ஜயசூரியவா ஜனாதிபதி வேட்பாளர் என்ற சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் எதிரவரும் 18ஆம் திகதி தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஜே.வி.பி அறிவிக்க உள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் மௌனம் சாதித்தே வருகிறது.
இவ்வாறான சந்தரப்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றியடைந்தால் எவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் நிகழும் என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மக்கள் சிலரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
இதன்போதே மக்கள் பலர் மேற்படி கருத்தை முன்வைத்துள்ளனர்.