களுகங்கையை அண்மித்துள்ள மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Report Print Jeslin Jeslin in சமூகம்

களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதால் அதனை அண்டியுள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புளத்சிங்கள, பாலிந்தநுவர, கிரியெல்ல, இங்கிரிய, மதுராவல ஆகிய பிரதேச செயலகங்களில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

களுகங்கையில் இரத்தினபுரி நீர் அளவிடும் இடத்தில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தாலும், எல்ல மற்றும் மில்லகந்தை நீர் அளவிடும் இடங்களில் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers