வவுனியா செட்டிக்குளம் பகுதியில் காட்டிலிருந்து சடலம் மீட்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா செட்டிக்குளம், அரசடிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து இன்று மாலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மனைவி வேலைக்கு சென்ற மதியம் வீடு திரும்பிய போது கணவரை வீட்டில் காணவில்லை. அதனையடுத்து அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னனெடுக்கப்பட்டன.

செட்டிக்குளம், அரசடிக்குளம் பகுதியில் உள்ள 4ம் வாய்க்கால் காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட சமயத்தில் குறித்த நபர் காட்டுப்பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருவதுடன் கட்டுத்துவக்கு வெடித்ததில் இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிரதே பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Latest Offers