வவுனியா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவை திறந்து வைத்தார் பிரதமர்

Report Print Thileepan Thileepan in சமூகம்
82Shares

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வவுனியாவுக்கு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் விஜயம் மேற்கொண்டு இருவேறு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வவுனியா வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர விபத்து பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக கையளித்ததுடன், இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.

நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல்லே இதன்போது நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நெதர்லாந்து நாட்டின் துணைத்தூதுவர் ஈவா வான்வோசம்பா, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியூதீன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.