இலங்கை மருத்துவசபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்
233Shares

தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளின் பதிவுகள் இந்த மாதம் 16ம் திகதி நடைபெறும் என்று இலங்கை மருத்துவசபை அறிவித்துள்ளது.

இதன்போது 1300 பேர் வரை தமது பதிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பதிவுகள் முடிவடைந்து இரண்டு கிழமைகளுக்குள் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

நீதிமன்ற கட்டளையின்படியே இந்த பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.