திருகோணமலை பகுதியில் பதற்றம்! கார் தீவைத்து எரிப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்றிரவு 7. 45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை நகர் பகுதியில் இருந்து நிலாவெளி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரொன்று அலஸ்தோட்டம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் முச்சக்கர வண்டியையும், துவிச்சக்கர வண்டியையும் மோதிவிட்டு அருகில் நின்ற பெண்ணுடன் மோதியதாகவும் தெரியவருகின்றது.

இதனால் கோபம் கொண்ட பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.