யாழ். நாகவிகாரைக்கு சென்றார் பிரதமர் ரணில்!

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை நாகவிகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களையும் பிரதமர் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இன்று வவுனியாவிற்கு சென்றிருந்த பிரதமர் அங்கு பல்வேறு நிகழவுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே, இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர், நாகவிகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் நாளைய தினம் யாழ்ப்பாணத்திலும் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளார். வீட்டுத் திட்டங்களைக் கையளிக்கும் அவர் மயிலிட்டியில் அமைக்கப்பட்ட துறைமுகத்தை மக்களுடைய பாவனைக்குக் கையளிப்பார்.

இந்திய நிதியுதவில் அமைக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தின் கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.