திருகோணமலை - கந்தளாய் பகுதியில் வைத்து யானையின் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விறகு எடுப்பதற்காக இருவர் இன்று காலை காட்டிற்கு துவிச்சக்கரவண்டியில் சென்றுள்ளனர்.
இதன்போது காட்டிற்குள் மறைந்திருந்த யானையொன்று முன்னால் சென்ற நபரை தாக்கியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மற்றைய நபர் தப்பியோடி சென்று வேறு நபர்களை உதவிக்கு அழைத்து கொண்டு வந்து யானையை விரட்டியுள்ளார்.
இதன் பின் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.