கடும் வறட்சியின் பின்னர் பெய்த மழை! அதியுச்ச மகிழ்ச்சியில் வவுனியா மக்கள்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் வெகு நாட்களின் பின்னர் திடீரென பெய்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று பிற்பகல் 12.30 மணி தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில் மேலும் மழை பொழிந்தமையினால் விவசாயிகளும் பொதுமக்களும் மனமகிழ்வடைந்துள்ளனர்.

Latest Offers