காரைதீவு தவிசாளரின் துரித நடவடிக்கையால் வெள்ளநீர் கழிமுகத்தினூடாக கடலுக்கு...

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

காரைதீவு - வெட்டுவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள வீடுகளில் புகுந்த வெள்ளநீர் இன்று காரைதீவு கழிமுகத்தினூடாக கடலுக்குள் வெட்டிவிடப்பட்டுள்ளது.

கடந்த காரைதீவுப்பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் இதன் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காரைதீவின் மேற்குப் புறத்திலுள்ள வயல் பிரதேச வடிச்சல் நீரும், அண்மைய மழை காரணமாக காரைதீவு நிந்தவூர் பிரதேசத்தில தேங்கிய வெள்ளநீரும் காரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதியில் தேங்கியதால் அப்பகுதியில் உள்ள குடிமனைகளுள் வெள்ளநீர் புக ஆரம்பித்தது.

இதனை கேள்வியுற்ற தவிசாளர் ஜெயசிறில் துரிதமாகச் செயற்பட்டு பிரதேச செயலாளருக்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ள நிலையில், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் மகுறூப்புடன் நேரில் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜே.சி.பி.இயந்திரத்தின் துணையுடன் வெள்ளநீர் கடலுக்குள் செல்லும் பாதை அமைக்கப்பட்டு கழிமுகத்தினூடாக கடலுக்குள் வெள்ளநீர் வெட்டிவிடப்பட்டுள்ளது.

Latest Offers