452 கிலோகிராம் போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்

Report Print Aasim in சமூகம்
64Shares

இந்த ஆண்டிற்குள் மட்டும் இலங்கை கடற்படையினர் 452 கிலோகிராம் போதைப்பொருட்களை கைப்பற்றி உள்ளதாக அதன் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட, இலங்கையின் உள் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கடற்படையினர் மேற்குறித்த தொகை போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

அதற்கு மேலதிகமாக கடந்த எட்டு மாத காலப் பகுதிக்குள் 2387 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் உள்நாட்டு கஞ்சா 03 கிலோ, பீச் இலைகள் 29009 கிலோ கிராம், மோதகவில்லைகள் 6800, போதையேற்றிக் கொள்ள பயன்படுத்தப்படும் மாத்திரைகள் 802, சட்டவிரோத சிகரட்டுகள் 8140, ஒருகிலோ ஹசீஸ் போதைப்பொருள் என்பனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்பிரதேசம் ஊடாக இலங்கைக்குள் கடத்திக் கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை தடுப்பதில் கடற்படையினர் தொடர்ந்தும் முனைப்புடன் செயலாற்றவுள்ளதாக அதன் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது