முகத்தை மூடிய நிலையில் வந்தவர்களால் நேர்ந்துள்ள கொடூரம்

Report Print Aasim in சமூகம்
222Shares

முகத்தை மூடிய நிலையில் வந்த மூன்று பேர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, பெரகிரிகம பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபரின் வீட்டிற்குள், முகத்தை மூடிய நிலையில் மூன்று பேரும் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்த நபரை அதாவது வீட்டு உரிமையாளரை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகாயங்களுக்கு உட்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 44 வயதான நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரழந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளதுடன், கதிர்காமம் பொலிஸார மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.