பொலன்னறுவையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் முற்றுகை

Report Print Aasim in சமூகம்
60Shares

பொலன்னறுவை பிரதேசத்தில் பாரியளவில் போலி ஆவணங்கள் தயாரிக்கும் நிலையமொன்றை நேற்று மாலை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

51 வயதான சநதேகநபர் ஹிங்குராக்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 86 இற்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் அலுவலக இலட்சினைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.