வெளிநாடொன்றில் பட்டினியில் வாடிய நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்

Report Print Kamel Kamel in சமூகம்

மெக்ஸிக்கோவில் பட்டினியில் வாடிய நிலையில் இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 65 அகதிகள் இவ்வாறு மெக்ஸிக்கோவின் விராகுருஸ் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க எல்லைப் பகுதியை அடையும் நோக்கில் இவர்கள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அகதிகள் கட்டாரிலிருந்து விமானம் மூலம் துருக்கி, கம்போடியா சென்றுள்ளனர். அங்கிருந்து ஈக்வடோர், பனாமா மற்றும் குவாத்தமாலா வழியாக மெக்ஸிக்கோவை சென்றடைந்துள்ளனர்.

இந்த அகதிக் கோரிக்கையாளர்கள் மீளவும் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக மெக்ஸிக்கோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers