சஜித் பிரேமதாஸவிற்காக தமிழர் பகுதியில் வீதிக்கு இறங்கிய மக்கள்

Report Print Rusath in சமூகம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நிறுத்த கோரி இன்றைய தினம் மட்டக்களப்பில் பொது மக்கள் எழுச்சி பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பொது மக்கள் எழுச்சி பேரணியானது அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் எஸ்.பி.ஜி. 2020 இன் மாவட்ட இணைப்பாளர் ஜெகவண்ணண் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணி கல்லடி பாலத்தினூடாக சென்று மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்துள்ளது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் சமூக சேவையாளர், செயல் வீரன், எமது தலைவர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக்க வேண்டும், எமக்கு அவர் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுத் திட்டங்களை பெற்று தந்தவர், மக்கள் விரும்பும் வேட்பாளரையே கட்சி தலைமை நியமிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

இதன்போது சஜித் பிரேமதாஸவின் படத்தை தாங்கிய வண்ணம் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers