தொடர் வறட்சிக்கு பின்னர் திருகோணமலையில் காற்றுடன் மழை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை மாவட்டத்தில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக விவசாய மரங்கள் முறிந்து விழுந்துள்ளது.

திருகோணமலை - கந்தளாய், கிண்ணியா, மூதூர், தோப்பூர், புல்மோட்டை போன்ற பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து இன்று காலை வரை கடும் மழை பெய்துள்ளது.

இதன்காரணமாக செய்கை செய்யப்பட்ட தென்னம் மற்றும் வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட வறட்சியான காலநிலையின் பின்பு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளமையினால் விவசாய பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் தமக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Latest Offers