வவுனியாவில் காயமடைந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

Report Print Theesan in சமூகம்
115Shares

வவுனியா - நெடுங்கேணி, கோரமோட்டை குளக்கரையில் காயமடைந்த நிலையில் நேற்றிரவு காட்டு யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததினாலேயே யானை உயிரிழந்துள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும், வன பாதுகாப்புத் துறையினரும் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை, வவுனியா வடக்கு காஞ்சிராமோட்டை, ஒலுமடு, சேனைப்புலவு, மருதோடை‌, ஊஞ்சால்கட்டி, வெடிவைத்தகல் போன்ற எல்லையோரக் கிராமங்களில் உள்ள விவசாயப் பயிர்களை காட்டு யானைகள் தொடர்ச்சியாக சேதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.