அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு எதிராக போராட்டம்

Report Print Sinan in சமூகம்

அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 5ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வைத்தியர்களினால் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளமை தெரியவந்துள்ளதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்சான் பெல்ஹென தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதில் அதிகமான வைத்தியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கள் கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவதாக கூறி வருகின்றனர்.

இவர்கள் தங்களை ஊடகங்களின் ஊடாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.