தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை! வவுனியாவில் ஓர் கருத்துகணிப்பு

Report Print Theesan in சமூகம்

எந்தவொரு ஆட்சி மாற்றம் நடந்தாலும் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவொரு சலுகைகளுமே கிடைக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஜனாதிபதித் தேர்தல் நிலவரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் எமது ஊடகவியலாளர் வவுனியாவில் இன்று மேற்கொண்ட கருத்துகணிப்பின் போதே பொதுமக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள்,

ஆட்சிக்கு வரும் மக்களிடம் மாறி மாறி சொல்லுவதை ஒழிய எந்தவொரு செயலும் அவர்களுக்கென நடைபெறவில்லை.

எல்லோரும் தங்களுடைய சுயநலத்தை பார்ப்பதை ஒழிய. மக்களுக்கு என்ன நடக்கின்றது. மக்களுக்கு என்ன தேவை என்று புரிந்து கொள்ளாததை போல் இருக்கின்றது.

வாக்கு எடுக்க வரும் போது நான் அதை செய்கிறேன். இதை செய்கிறேன் என கூறுவார்கள். வாக்கு எடுத்ததிற்கு பிறகு தமிழர்கள் பற்றி சிந்திப்பதே கிடையாது என அவர்கள் கூறியுள்ளனர்.

Latest Offers