துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் இருவர் கைது

Report Print Aasim in சமூகம்

தணமல்வில செவனகல பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டீ-56 துப்பாக்கி ரவைகள் 14, இரட்டைக் குழல் துப்பாக்கி, அதற்கான ரவைகள் 32 என்பன சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

செவனகல விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Latest Offers