சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து இரண்டு தடவைகள் தப்பிச் சென்ற கைதியொருவர் மீண்டும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்று தலைமறைவாக வாழ்ந்த நிலையில் இன்று காலை திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவர் திக்வல்லை நில்வெல்ல பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இரண்டு தடவைகள் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதில் ஒரு தடவை மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வேளை நீதிமன்ற ஜன்னல் ஊடாக திரும்பவும் தப்பிச் சென்றிருந்தார்.
இப்பா (ஆமை) எனும் புனைபெயரைக் கொண்ட சந்தேக நபர் இன்று காலை கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 730 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பிலும் அவர் தேடப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.