தந்தையொருவர் செய்த மோசமான செயல்! நீதிமன்றத்தின் தீர்ப்பு

Report Print Mubarak in சமூகம்
103Shares

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரொருவரை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஆணைச்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஒன்பது வயதுடைய சிறுமிக்கு நூறு ரூபாய் பணத்தினை கொடுத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் அயல் வீட்டில் சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும், சந்தேகநபரின் மகளுடன் தினமும் விளையாடச் செல்வதாகவும், சம்பவ தினம் குறித்த நபரின் மகள் வீட்டில் இல்லாத நிலையில் நூறு ரூபா பணத்தினை கொடுத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் பெற்றோர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து, மூதூர் நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே குறித்த விளக்கமறியியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமி மருத்துவ அறிக்கைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.